ஜேர்மனியின் opportunity card visa திட்டம்: தகுதி அளவுகோல்கள் வெளியீடு
ஜேர்மனி புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி அளவுகோல்களை வெளியிட்டுள்ளது.
இந்த விசா திட்டம், திறமையான தொழிலாளர்கள் (skilled workers) job offer இல்லாமல் முன்கூட்டியே ஜேர்மனிக்கு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Opportunity Card-ன் அம்சங்கள்
இது புள்ளி அடிப்படையிலான (points-based) தேர்ச்சி முறையில் செயல்படும்.
Opportunity Card விசா முதல் கட்டமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.
அக்காலக்கட்டத்தில் வேலை பெற்றால், தற்காலிக அல்லது நிரந்தர வதிவுச் சான்று பெற முடியும்.
தகுதி பெற தேவையான விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 6 புள்ளிகள் பெற வேண்டும்.
புள்ளிகள் கல்வி, வேலை அனுபவம், மொழி திறன், வயது போன்ற காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
வேலையாட்கள் குறைவாக இருக்கும் தொழில்களில் அனுபவம் உள்ளவர்கள், முன்னதாக ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தகுதியான வாழ்க்கை துணையுடன் விண்ணப்பிக்கும் நபர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெறலாம்.
விண்ணப்ப செயல்முறை
விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வேலை அனுபவ சான்றுகள், மொழித் தேர்ச்சி, நிதி ஆதாரம் மற்றும் மருத்துவ காப்பீட்டுச் சான்றுகள் தேவையாக இருக்கும்.
விண்ணப்பங்கள் ஜேர்மனி குடியேற்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
சில வெளிநாட்டு ஜேர்மன் தூதரகங்கள் சேவை கட்டணத்துடன் விண்ணப்பங்களை செயல்படுத்துகின்றன.
இந்த புதிய திட்டம், திறன்மிகு தொழிலாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கான அமைப்புசார்ந்த வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |