உக்ரைனுக்காக ரஷ்யாவிற்கு அடிகொடுத்த கனடா: புதிய தடைகள் அறிவிப்பு
ரஷ்ய ட்ரோன் மற்றும் எரிசக்தி உற்பத்தி மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது.
ரஷ்யா மீதான நடவடிக்கை
ஒன்றாரியோவில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின்போது, ரஷ்யா மீதான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்டார். 
அதன்படி, ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் எரிசக்தி உற்பத்தி மீது புதிய தடைகளை விதிக்கப்பட்டுள்ளது.
இது அந்நாடு, உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்பையும் குறிவைத்து கனடா எடுத்துள்ள நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.
ஐடி உள்கட்டமைப்பு
அதேபோல், சர்வதேச தடைகளை மீறி எண்ணெய் கொண்ட செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்யாவின் நிழல் கடற்படை என்று அழைக்கப்படும் கப்பல்களையும் குறிவைக்கிறது.
இதுகுறித்து அனிதா ஆனந்த் உக்ரைன் வெளியுறவு அமைச்சரிடம் கூறும்போது, "ரஷ்யாவின் நடவடிக்கைகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை கனடா தொடர்ந்து உறுதி செய்யும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கலப்பின உத்திகளில் பயன்படுத்தப்படும் ஐடி உள்கட்டமைப்பு முதல்முறையாக குறிவைக்கப்பட்டுள்ளது" என்றார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |