H1B விசா வைத்திருப்பவர்களுக்கு கனடாவில் வாய்ப்பு: 10,000 பேருக்கு வேலை
அமெரிக்காவால் வழங்கப்படும் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கனடா தயாராக உள்ளது.
கனடாவில் 10,000 பேர் திறந்த வேலை அனுமதியில் வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு கனடாவில் பணியாற்ற முடியும். கனடாவில் எங்கும் மற்றும் எந்த முதலாளியின் கீழும் வேலை செய்ய முடியும்.
immigrationnewscanada
மேலும், அத்தகைய விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு தற்காலிக வதிவிட விசாக்கள் வழங்கப்படும். அவர்களும் அதனுடன் வேலை செய்யலாம் அல்லது படிக்கலாம்.
புதிய H1-B சிறப்பு தொழில் விசா வைத்திருப்பவர்களுக்கான பணி அனுமதி (Work Permit) ஜூலை 16, 2023 முதல் கிடைக்கும். கனடா குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Canada Immigration Minister Sean Fraser-Photo: Reuters
இந்த வருட இறுதியில் புதிய குடிவரவு சட்டத்தை அறிமுகப்படுத்த கனேடிய அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த மாற்றம் உலகின் திறமையான தொழிலாளர்கள் கனடாவுக்கு வந்து அதன் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர வாய்ப்பளிக்கும். எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது யார் தகுதியானவர்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Canada Work Permit, US H1-B Visa, Jobs in Canada
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |