இந்திய இளைஞர் கொலை: கனடா அரசின் ஜாமீன் அமைப்பால் ஏற்பட்ட துயரம்?
கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், அவரது உயிரிழப்புக்கு கனடாவின் கடுமையற்ற ஜாமீன் அமைப்பு காரணமா என கேள்வி எழுந்துள்ளது.
கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்
X
கடந்த மாதம் 23ஆம் திகதி மதியம் 3.30 மணியளவில், ரொரன்றோ பல்கலை வளாகத்தில் ஷிவாங்க் அவஸ்தி (20)என்னும் இந்திய மாணவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
அவஸ்தி கொலை தொடர்பில், Babatunde Afuwape (23) என்னும் நைஜீரியா நாட்டவரை கைது செய்துள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Toronto Police/X/Unsplash/File
எழுந்துள்ள கேள்விகள்
விடயம் என்னவென்றால், 2018ஆம் ஆண்டு, Babatunde, பீட்சா டெலிவரி செய்யும் ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடித்துள்ளார். அப்போது அவர் அந்த நபரை பல முறை கத்தியால் குத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு, மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட Babatunde மீது, கொள்ளை, துப்பாக்கியால் சுட்டது, துப்பாக்கி வைத்திருந்தது என பல பயங்கர குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவ்வளவு பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிலையிலும், பல முறை ஜாமீன் நிபந்தனைகளை மீறிய நிலையிலும், மின்னணு கண்காணிப்புக் கருவியை துண்டித்தபோதும், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி Babatundeக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆக, அவர் மீண்டும் ஒரு கொடிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். முனைவர் பட்டப்படிப்புக்காக கனடா சென்ற இந்திய இளைஞரான ஷிவாங்க் Babatundeயால் கொல்லப்பட்டுவிட்டார்.
இந்நிலையில், Babatundeக்கு ஜாமீன் வழங்கிய அமைப்பு, அவரால் சமுதாயத்துக்கு ஆபத்து இல்லை என தவறாக முடிவு செய்ததா?
குற்றமிழைத்தவர்கள் மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து வாழ வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்பதற்காக, இப்படி கொடூர குற்றங்களில் ஈடுப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க கனடா அரசு எடுத்த முடிவு சரியானதா?
Babatundeக்கு ஜாமீன் வழங்காமல் இருந்திருந்தால் ஒரு அப்பாவி இளைஞரின் வாழ்க்கை பாதியிலேயே முடியாமல் தடுத்திருக்கமுடியுமா, என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |