கனடாவில் வேலை அனுபவம் இல்லாமல் நிரந்தர குடியுரிமை-புதிய திட்டம்
கனடாவில் பராமரிப்பு பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு, கனடிய வேலை அனுபவம் இல்லாதபோதும் நிரந்தர குடியுரிமை (PR) வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
புதிய குடியுரிமை திட்டம்
கனடாவின் Home Care Worker Immigration Pilot Programs மார்ச் 31, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
முந்தைய Home Child Care Provider Pilot மற்றும் Home Support Worker Pilot திட்டங்கள் ஜூன் 17, 2024 அன்று முடிவடைந்தன.
புதிய திட்டத்தின் கீழ் 15,000-க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.
பணி அனுபவம் தேவையில்லை
விண்ணப்பதாரர்கள் கனேடிய வேலை அனுபவம் தேவைப்படாமல் நிரந்தர குடியுரிமை (PR) பெறலாம்.
Labour Market Impact Assessment (LMIA) என்பது கூட தேவையில்லை.
கனடாவின் Quebec மாகாணத்தை தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
பணிக்கான தகுதிகள்
- ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் CLB-4 (Canadian Language Benchmarks) அல்லது NCLC-4 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கனேடிய உயர்நிலைப் பள்ளி (high school) டிப்ளோமாவிற்கு சமமான கல்வித் தகுதி.
- குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்புடைய வேலை அனுபவம் அல்லது பயிற்சி சான்றிதழ்.
- முழு நேர வீட்டுப் பராமரிப்பு வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை
இரண்டு பிரிவுகள் - கனடாவில் வேலை செய்யும் நபர்கள், வேலை செய்யாத நபர்கள்
முதலில் கனடாவில் உள்ளவர்களுக்கான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். வேலை கிடைத்தவுடன் PR உடனடியாக வழங்கப்படும்.
இந்த புதிய திட்டம் வீட்டுப் பராமரிப்பு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்கி, அவர்களின் குடும்பத்தாரும் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada PR, Canada offers permanent residency, Canada Home care workers