கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரி-ட்ரம்ப் மிரட்டல்
கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்
மேலும், கனடாவின் பால் மற்றும் இதர பண்ணை பொருட்கள் மீது சுமார் 250 சதவீத வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார்.
2024-ல் கனடா பல அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகள் விதித்து வருகிறது, குறிப்பாக பால் தொழில் பாதுகாப்பு முறையின் கீழ் அதனை கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளபடி, அமெரிக்க பால் பொருட்கள் மீது கனடா விதித்துள்ள வரிகள்:
பால் - 243%
வெண்ணெய் - 298%
சீஸ் - 245%
"எங்கள் அமெரிக்க பண்ணையாளர்கள் நியாயமான வர்த்தகத்தை பெற வேண்டும். இதை அதிக நாட்கள் அனுபவிக்க முடியாது" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊழல் வரிகள் - அமெரிக்காவின் பதில் நடவடிக்கை
ஒவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "கனடா பல ஆண்டுகளாக மரம் மற்றும் பால் பொருட்களில் அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது. இதை தொடர்ந்தால், அதே அளவிலான பதிலடி வரிகள் விதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.
புதிதாக அமுலுக்கு வர இருக்கும் வரிகள் ஏப்ரல் 2 முதல் அமலாகும் என்றும், வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இதை அறிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு அமெரிக்க பண்ணையாளர்களுக்கு ஆதரவாகவும், கனடா மீது அழுத்தம் கொடுப்பதற்கும் அமெரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada US Tarrif, Trump Tarrif on Canada, canada tarrif on US