கனடாவில் தீபாவளி கொண்டாட்டம்: நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரதமர் மார்க் கார்னி
கனடா பிரதமர் மார்க் கார்னி தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்தில் கனடா பிரதமர்
வெள்ளிக்கிழமை மாலை கனடாவில் கிரேட்டர் டொராண்டோ(Greater Toronto) பகுதியில் நடைபெற்ற டிரில்லியம் தீபாவளி காலா 2025(Trillium Diwali Gala 2025) நிகழ்வில் கனடா பிரதமர் மார்க் கார்னி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் பவுண்டேஷன் நடத்திய இந்த தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, இது இருளை ஒளி வெல்வது எனவும், நம்பிக்கை புதுப்பித்தல் மற்றும் நற்பண்புகளை அதிகரிக்க செய்தல் ஆகியவை இந்த தீபாவளி பண்டிகையின் மைய மதிப்புகள் என்று விவரித்தார்.
அத்துடன் இந்த ஒளியின் திருநாள் கனடா முழுவதும் பரவி, நம் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை கொண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில், கனேடிய குடிமக்களின் அடிப்படை பாதுகாப்பு உரிமையையும் வலியுறுத்தி பிரதமர் மார்க் கார்னி பேசினார்.
மார்க் கார்னி பிரதமராக மார்ச் மாதம் பதவியேற்றுக் கொண்ட பிறகு கலந்து கொள்ளும் முதல் தீபாவளி கொண்டாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |