நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ள கனடா தபால் துறை பணியாளர்கள்
கனடா தபால் துறை பணியாளர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள்.
தபால் துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
பின்னணி கனடா தபால் துறைக்கு பொறுப்பான அமைச்சரான ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound), கனடா தபால் துறை திவாலாகும் நிலையிலுள்ளதாகக் கூறி, தபால் துறையில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளார்.
வீடுகளுக்கு தபால் பட்டுவாடா செய்வதை நிறுத்துவது, அவசர தபால்கள் தவிர்த்து பிற தபால்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு பதிலாக ரயிலில் கொண்டு செல்வது, கிராமப்புற தபால் நிலையங்களை மூடுவதற்கான தடையை நீக்குவது ஆகிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளதாக ஜோயல் அறிவித்துள்ளார்.
மக்களிடம் நேரடியாக தபால்களை கொண்டு கொடுப்பது அவர்கள் நலம் குறித்து அறிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறும் தபால் ஊழியரான டேனியல் ப்ரையன்ட் என்பவர், வீடு வீடாக தபால் கொடுக்க போகும்போதே அந்த வீட்டிலுள்ளவர்கள் நலமாக இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளனவா என்பதையும் அறிந்துகொள்வோம்.
இனி அது சாத்தியப்படாது என்பது வருத்தமே என்கிறார். தபால் துறையில் மாற்றங்கள் குறித்த அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தபால் ஊழியர்கள் யூனியனான The Canadian Union of Postal Workers (CUPW), கனடா முழுவதும் பணியாற்றும் தபால் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |