பாராசிட்டமால் குறித்த ட்ரம்பின் கூற்று: சுவிஸ் மருத்துவ அமைப்பு கூறுவதென்ன?
கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதற்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு உருவாகும் அபாயத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
மேலும், பாராசிட்டமாலை கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்றும் அத்தியாவசியமாக தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலகம் சுற்ற புறப்பட்ட இந்திய இளைஞரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவகாரம்: பிரித்தானியர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சுவிஸ் மருத்துவ அமைப்பு கூறுவதென்ன?
டைலினால் என அழைக்கப்படும், பாராசிட்டமால் அல்லது அசிட்டமினோஃபென் என்பது ஒரு வலிநிவாரணி ஆகும்.
இந்த பாராசிட்டமால் குறித்த ட்ரம்பின் கூற்று குறித்து உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில், சுவிஸ் மருத்துவ அமைப்பான Swissmedic, பாராசிட்டமாலால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் விகிதாச்சாரத்தைப் பார்க்கும்போது, கர்ப்பகாலத்தைப் பொருத்தவரை, அதனால் நேர்மறையான விளைவுகளே உள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதற்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு உருவாகுவதற்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |