கனடாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய மாணவர்கள்
கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவில் Prince Edward Island அரசு (PEI) நிரந்தர குடியிருப்பு (permanent residency/PR) தொடர்பாக கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக இந்திய மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
2024ல், 2,100 பேருக்கு பதிலாக, 1,600 பேருக்கு PR வழங்க உள்ளாட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாகாண நியமன திட்டத்தின் (PNP) கீழ் PRக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
கனடாவில் படிப்பை முடித்து, PR-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்த முடிவுகள் தர்மசங்கடமாக மாறியுள்ளன.
பெரும்பாலான விசாக்கள் காலாவதியாகின்றன. அவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டியியுள்ளது. சுமார் 50 பேர் ஏற்கனவே இந்தியா திரும்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Canada, Canada permanent residency, Canada PR, Indian Students Hunger Strike in canada