Express Entry மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் தொடங்கிய கனடா
Canada Resumes Express Entry PR Invitations: Express Entry மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் கனடா தொடங்கியுள்ளது.
Express Entry மூலம் மீண்டும் PR அழைப்பு
கனடாவில் நிரந்தர வதிவிடத்தை (Permanent Residence) பெற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக கருதப்படும் Express Entry திட்டத்தின் கீழ், புதிய அழைப்புகளை கனடா அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது.
கனடாவின் குடியேற்றத் துறையான Immigration, Refugees and Citizenship Canada (IRCC), நவம்பர் 23 அன்று நடைபெற்ற புதிய தேர்வில் 1,999 பேருக்கு விண்ணப்பிக்க அழைப்புகளை (ITA) வழங்கியுள்ளது.

இந்த தேர்வு, நவம்பர் 3 முதல் அமுலுக்கு வந்த புதிய Comprehensive Ranking System (CRS) மாற்றங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் Express Entry குலுக்கலாகும். இதில் பங்கேற்க குறைந்தபட்சமாக 673 CRS புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2026 ஜூலை 31-ஆம் திகதிக்கு முன்பு Express Entry சுயவிவரத்தை உருவாக்கியிருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.
இந்த சுற்றில் மாகாண நியமன திட்டம் (Provincial Nominee Program - PNP) மூலம் தேர்வானவர்களுக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டன. மாகாண அரசுகள் குறிப்பிட்ட திறன்கள் மற்றும் பணியாளர் தேவைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து பரிந்துரைக்கின்றன.
2026-ஆம் ஆண்டு முழுவதும் கனடா Express Entry திட்டத்தின் மூலம் மொத்தம் 151,408 விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது. இதில் பிரெஞ்சு மொழி திறன் கொண்டவர்கள், கனேடிய பணியனுபவம் பெற்றவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், வணிக மேலாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, கனடாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழில்களில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் CRS புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், கனேடிய பணியனுபவம் அல்லது தகுதியான வேலைவாய்ப்பு சலுகை (Job Offer) வைத்திருப்போருக்கும் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். குறிப்பாக, முன்பு நீக்கப்பட்ட வேலைவாய்ப்பு அடிப்படையிலான CRS புள்ளிகள் திருத்தப்பட்ட வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பல சந்தர்ப்பங்களில் LMIA (Labour Market Impact Assessment) ஆவணம் இல்லாமலேயே விண்ணப்பதாரர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வேலை செய்து வரும் மற்றும் நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருக்கும் பல ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Express Entry தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படுவதால், திறமையான பணியாளர்களை கனடா தொடர்ந்து வரவேற்கும் என்ற சிக்னல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |