ஜனவரி இறுதியில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்வு! கனேடிய மாகாண பிரீமியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒண்டாரியோ ஜனவரி இறுதியில் இருந்து வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் என்று பிரீமியர் Doug Ford அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த Doug Ford கூறியதாவது, ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஒண்டாரியோவில் ஜனவரி 5 ஆம் திகதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அடுத்து சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மீள தொடங்கி இருக்கிறது.
ஓமிக்ரான் பாதிப்புக்ள இந்த மாத இறுதியில் உச்சத்தை அடையும். ஓமிக்ரான் அலையின் மோசமான பாதிப்பை எதிர்வரும் நாட்களில் சந்திக்க இருக்கிறோம் என்பதில் உறுதியாக உள்ளோம்.

பொது சுகாதார நடவடிக்கைகளை கவனமாகவும் படிப்படியாகவும் தளர்த்தும் நிலையில் இப்போது இருக்கிறோம்.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன், ஜனவரி 31 முதல் உணவகங்கள், மால்கள் மற்றும் திரையரங்குகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட மாகாணம் அரசு அனுமதிக்கும் என்று Doug Ford கூறினார்.
அண்டை மாகாணமான  கியூபெக்கில், ஓமிக்ரான் பாதிப்புகள்  உச்சத்தில் இருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை பாதுகாக்க உதவும் கட்டுப்பாடுகளை நீடிக்கப்போவதாக பிரீமியர் Francois Legault கூறினார்.             
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        