கனடா பாடசாலையில் பன்றி இறைச்சிக்கு தடையா? சர்ச்சையை கிளப்பியுள்ள காணொளி
கனடாவில் பாடசாலை ஒன்றில், பன்றி இறைச்சியை (Ham Sandwich) மதிய உணவாக கொண்டு வரவேண்டாம் என பெற்றோரிடம் கேட்டதாக கூறும் டிக்-டாக் காணொளியொன்று வைரலானது.
இந்த காணொளியில், கல்கரி பகுதியைச் சேர்ந்த பெற்றோர் டேவிட் டிவோல்ஃப், ஹாம் மற்றும் பேக்கன் போன்ற பன்றி இறைச்சி உணவுகள் சில மாணவர்களின் மத உணர்வுகளை பாதிக்கின்றன என்பதால்,அவற்றை தவிர்க்க பாடசாலை கேட்டதாக கூறியுள்ளார்.
மேலும், "இது ஒரு பாடசாலை, அகதிகள் முகாம் அல்ல" என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் இது இஸ்லாமோபோபியாவை தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக எந்த பாடசாலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
ஆனால், காணொளியில் கூறப்பட்ட தகவல்கள் Reddit மற்றும் X போன்ற தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.
Schools in Canada are e-mailing parents asking them not to put ham or bacon in their kids packed lunch because it offends people of other religion's pic.twitter.com/gMwaU4Hr6A
— Grifty (@TheGriftReport) October 13, 2025
சிலர் இதை மத அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பாடசாலைகளில் மதச்சார்பற்ற சூழலை பாதிக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம், கனேடிய பாடசாலைகளில் மத உணர்வுகள், உணவுப் பழக்கங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada school lunch pork ban, Ham sandwich controversy Canada, TikTok viral school video 2025, Canadian school halal lunch rules, David DeWolfe pork video, Islamophobia school lunch Canada, Calgary parent school lunch video, Canada school religious food rules, Pork-free lunch policy Canada, Canadian school viral TikTok