கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
கனடாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2024-2025 காலகட்டத்தில், மொத்தம் 14,954 தற்காலிக குடியிருப்பாளர்கள் குறைந்துள்ளனர் என்று CIC News வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2023-2024 காலத்தில், கனடா 7.8 லட்சம் புதிய தற்காலிக குடியிருப்பாளர்களை சேர்த்திருந்தது. ஆனால், புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்ததால், 2025-இல் முதல் முறையாக குறைவு பதிவாகியுள்ளது.
ரொறன்ரோ நகரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது - 44,792 பேர் குறைந்துள்ளனர்.

அதேபோல், வாங்கூவர் நகரத்தில் 10,098 பேர் குறைந்துள்ளனர். ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, மானிடோபா ஆகிய மாநிலங்களிலும் குறைவு பதிவாகியுள்ளது.
மாறாக, கியூபெக் மற்றும் ஆல்பெர்டா மாநிலங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மொன்றியல் நகரம் 17,635 புதிய தற்காலிக குடியிருப்பாளர்களை சேர்த்துள்ளது. கல்கரி மற்றும் எட்மண்டன் நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் அதிகரித்துள்ளனர்.
இந்த மாற்றத்திற்கு காரணமாக, குறைந்த ஊதிய வேலை அனுமதிகளுக்கான கட்டுப்பாடுகள், spouse work permit குறைப்பு, study permit cap, post-graduation work permit eligibility குறைப்பு போன்ற புதிய விதிமுறைகள் குறிப்பிடப்படுகின்றன.
கனடாவின் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada decline foreign workers international students 2026, Canada immigration policy impact workers students drop, Canada sees first fall in foreign workers students, Canada international student numbers decline report, Canada foreign worker permits reduced immigration rules, Canada immigration changes study permit cap 2026, Canada foreign workers international students decrease, Canada immigration restrictions impact labor education, Canada immigration policy effects workers students