கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: சர்வதேச மாணவர்களின் பெற்றோர்களுக்கு இலங்கை எச்சரிக்கை!
கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் இலங்கையர்களுக்கு நிகழ்ந்த சோகம்
கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake) (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சிகிச்சைக்கு பிறகு சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர் 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவர் ஆவார். இவர் கல்வி கற்ப்பதற்காக கனடாவுக்கு வந்த இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களுக்கு இலங்கை தூதரகம் எச்சரிக்கை
இந்நிலையில், வெளிநாட்டில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டொரண்டோவில்(Toronto) உள்ள இலங்கை துணைத் தூதரகம்(Consulate General of Sri Lanka) ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Consulate highlights pressures of international students, after Ottawa slaying leaves six dead.
— Toronto Star (@TorontoStar) March 8, 2024
The Consulate General of Sri Lanka in Toronto issued a statement calling for parents of international students to be cautious of the pressures they experience. https://t.co/cGd114YBsW
மேலும் வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுடன் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |