கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி
கனடாவிற்கு (Canada) மாணவர் விசாவின் மூலம் பயணம் செய்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் வேலை விசாவை தடை செய்ய கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தடை செய்யப்படவுள்ள விசா முறைகள்
படிப்பு, வேலை என அனைத்திலும் வளமான நாடாக கனடா இருந்து வருகிறது. பல நாடுகளில் இருந்தும் பலர் கனடாவில் வேலை மற்றும் படிப்பிற்காக புலம் பெயர்ந்து வருகிறார்கள்.
அதிகமான வெளிநாட்டவர்கள் குடியேறி வருவதால், கனடா நாட்டு மக்கள் தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வேலை வாய்ப்பு குறைவாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கமைய ஒருவரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை விசாவை (Spousal Visa) பெற்றுக் கொள்ளும் செயல்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கனடாவில் நிரந்தர குடியிறுப்பிற்கான கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதாவது சுமார் 10 முதல் 15 சதவிகிதம் அதிகரிக்க கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வேலை விசா (Work Visa) மூலம் கனடா வருபவர்களின் செயல்பாடுகளும் சரிவர இருக்கிறதா என கண்காணிக்கும் நடவடிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருக்கும் 10 பிரிவில் உயர்கல்வி படித்து செல்லுபடியாகும் மாணவ விசா வைத்துள்ளவர்களின் கணவர் மற்றும் மனைவிக்கு வேலை விசா (Work Visa) வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை பெறுவதற்கு படித்துக்கொண்டிருக்கும் பல்கலைகழகத்தில் இருந்து கடிதம், பதிவு செய்ததற்காக சான்று, கணவன் மனைவி என்பதற்காக சான்று போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நிரந்த குடியிருப்பு கட்டணம் வருகின்ற 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, சுமார் 515 டாலர் முதல் 575 டாலர் வரை செலுத்த நேரிடலாம். இது 18 வயதிற்கு குறைவானர்களுக்கு இல்லை எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தகவல் தொடர்பில் விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள கனடாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை இணையதளத்தின் ஊடாக அறிந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Canada Study Permit, Canada cuts study permits for 2024, Canada Spouse Visa, Canda Work Permit, Canda, Visa, Goverment of Canada, Canada Permanent Resident Card
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |