கனடாவில் தெருவொன்றிற்கு வைக்கப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் பெயர்
கனடாவில் உலகப் புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் தெருவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில், 2 இந்திய பிரபலங்களின் பெயரில் இரண்டு தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது, இந்திய சினிமா மற்றும் இசையின் உலகளாவிய தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் தெரு (Allah-Rakha Rahman Street)
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் தெரு அமைக்கப்பட்டுள்ளது.

ரோஜா, உயிரே, ஸ்லம்டாக் மில்லியனேர் போன்ற படங்களின் இசை, மொழி மற்றும் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இளம் தலைமுறையினரிடையே ரஹ்மான் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ராஜ் கபூர் க்ரெசென்ட் (Raj Kapoor Crescent)

பிராம்ப்டன், ஒன்ராறியோவில் இந்திய சினிமாவின் “ஷோமேன்” என அழைக்கப்படும் ராஜ் கபூரின் பெயரில் தெரு மற்றோரு அமைக்கப்பட்டுள்ளது.
அவரது ஆவாரா, ஷ்ரீ 420, மேரா நாம்ஜோக்கர் போன்ற படங்கள், இந்தியாவைத் தாண்டி சோவியத் யூனியன், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பிராம்ப்டன் நகரம், பல்வேறு கலாச்சார பங்களிப்புகளை மதிக்கும் வகையில், தெரு பெயர்களில் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
சமூகத்தின் பெருமை
கனடாவில் சுமார் 2.88 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர்.
இந்த தெருக்கள், இந்திய சினிமா மற்றும் இசை, அந்நாட்டு நகர வாழ்க்கையின் நிலையான அடையாளமாக மாறியுள்ளதை காட்டுகின்றன.
சுற்றுலா இடங்களாக இல்லாவிட்டாலும், இவை கலாச்சாரச் சின்னங்களாக மதிக்கப்படுகின்றன.
ராஜ் கபூர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த தெருக்கள், இந்திய கலைஞர்களின் உலகளாவிய தாக்கத்தையும், கனடாவின் பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada streets named after A.R. Rahman, Raj Kapoor Crescent, A.R. Rahman Street Canada, Indian diaspora, Bollywood influence Canadian multicultural identity, Raj Kapoor, AR Rahman Oscar-winning composer, Slumdog Millionaire, Canada honors Indian cinema and music legends, Tamil Music Composer, Tamil Music director AR Rahman