2026-ல் கனடாவில் இந்திய மாணவர்களின் கல்வி செலவுகள் - முழு விவரம்
கனடா, இந்திய மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான வெளிநாட்டு கல்வி இடமாக இருந்தாலும், அங்கு படிப்பது அதிக கட்டணமும், விலைவாசியும் கொண்டதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
படிப்பு செலவுகள்
கனடாவில் பட்டப்படிப்பு (Undergraduate) பயில ஒருவருக்கு சராசரியாக ஆண்டுக்கு 36,100 கனேடிய டொலர் (ரூ.23-24 லட்சம்) தேவைப்படுகிறது.
முதுகலை படிப்பிற்கு (Postgraduate) ஆண்டுக்கு 21,100 கனேடிய டொலர் (ரூ.13-14 லட்சம்) தேவைப்படுகிறது.
கல்லூரி அல்லது டிப்ளமோவிற்கு குறைந்த செலவாக, ஆண்டுக்கு 7,000 முதல் 22,000 கனேடிய டொலர் ஆகிறது.

விலைவாசி
வாடகை: மாதம் 500 முதல் 2,000 க.டொலர் (நகரத்தைப் பொறுத்து).
உணவு: மாதம் 240 முதல் 480 க.டொலர்
பொது போக்குவரத்து: மாதம் 80 முதல் 156 க.டொலர்
மொத்தத்தில், ஆண்டுக்கு 15,000 க.டொலர் வரை மாணவர்கள் திட்டமிட வேண்டும்.
கூடுதல் செலவுகள்
Study Permit Fee: CAD 150
Biometrics Fee: CAD 85
புத்தகங்கள்/பயிற்சி பொருட்கள்: ஆண்டுக்கு CAD 500–1,000
Health Insurance: மாதம் CAD 75–120 (மாநில விதிமுறைகளுக்கு ஏற்ப).
பயணச் செலவுகள்: இந்தியா-கனடா விமான டிக்கெட், தனிப்பட்ட செலவுகள்.
முக்கிய விதிமுறைகள்
IRCC (Immigration, Refugees and Citizenship Canada) விதிப்படி, மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண்டுக்கான கட்டணமும் வாழ்க்கை செலவுகளும் செலுத்தும் திறனை நிரூபிக்க வேண்டும்.
2026-இல் கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், உயர் கட்டணங்கள், வாழ்வு செலவுகள், மற்றும் கட்டாய காப்பீடு ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
பெரிய நகரங்களில் (Toronto, Vancouver) அதிக விலைவாசி இருக்கும் நிலையில், சிறிய நகரங்கள் சற்றே மலிவாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |