எதிரிக்கு எதிரி நண்பன்... அமெரிக்க தொல்லையால் மற்றொரு நாட்டுடன் கைகோர்க்கும் கனடா
அண்டை நாடான அமெரிக்கா தொடர்ந்து தொல்லை கொடுத்துவரும் நிலையில், அமெரிக்காவுக்கு தலைவலியைக் கொடுத்துவரும் மெக்சிகோ நாட்டுடன் கைகோர்க்க கனடா முடிவு செய்துள்ளது.
எதிரிக்கு எதிரி நண்பன்...
ஒரு காலத்தில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய வட அமெரிக்க நாடுகளின் வலிமையான கூட்டணியைக் கண்டு உலகம் பொறாமைப்பட்டது.
ஆனால், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானபிறகு நிலைமை அப்படியில்லை.
கனடா மீதும் மெக்சிகோ மீதும் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டல் என, தொல்லையாகவே மாறிவிட்டார் ட்ரம்ப்.
ஆக, தொல்லை கொடுக்கும் அமெரிக்காவுக்கு கொஞ்சம் கலக்கம் கொடுக்க கனடாவும் மெக்சிகோவும் கைகோர்க்கலாம் என முடிவு செய்துள்ளன.
கனடா பிரதமரான மார்க் கார்னி, நேற்று மெக்சிகோ சென்று அந்நாட்டின் ஜனாதிபதியான கிளாடியாவை (Claudia Sheinbaum) சந்தித்த நிலையில், இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்துள்ளன.
என்றாலும், இரு நாடுகளுமே அமெரிக்காவுக்கு எதிராக பேசுவதை தவிர்ப்பதில் கவனமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊடகவியலாளர்களை சந்தித்த கனடா பிரதமரான மார்க் கார்னியும் மெக்சிகோ ஜனாதிபதியான கிளாடியாவும், தங்கள் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசிய அதே நேரத்தில், அமெரிக்காவுடனான பகிரப்பட்ட கூட்டாண்மைக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் தவறவில்லை.
நாங்கள் அமெரிக்காவைப் பாராட்டுகிறோம், அவர்களை வலிமையாக்குகிறோம், மேலும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது வலிமையானவர்களாக இருக்கிறோம் என்றும் மார்க் கார்னி செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |