கனடாவில் விசிட்டர் விசா, வேலை, கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் அமுல்
கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன.
புதிய விதிகள் மூலம் அதிகாரிகளுக்கு தெளிவான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவை, விண்ணப்பதாரர்கள் தகுதி இழப்பது, தவறான தகவல் வழங்குவது அல்லது அனுமதிக்கப்படாதவர்களாக மாறுவது போன்ற காரணங்களுக்காக ஆவணங்களை ரத்து செய்ய அனுமதிக்கின்றன.
முக்கிய அம்சங்கள்:
Visitor Visa: நிர்வாகத் தவறு, தகுதி இழப்பு, புதிய அனுமதி மறுப்பு, அல்லது நாட்டை விட்டு செல்லத் தவறுதல் போன்ற காரணங்களால் ரத்து செய்யலாம்.
electronic travel authorizations (eTA): தவறான பாஸ்போர்ட், குற்றச்சாட்டு காரணமாக அனுமதி மறுப்பு போன்றவை அடிப்படையாகும்.
கல்வி/வேலை அனுமதி: தவறான கல்வி நிறுவனம் அல்லது வேலை வழங்குநரால் அனுமதி ரத்து செய்யலாம்.
தானாகவே ரத்து செய்யப்படும் சூழ்நிலைகள்: அனுமதி பெற்றவர் நிரந்தர குடியுரிமை பெறுவது, பாஸ்போர்ட் இழப்பது அல்லது மரணம் அடைவது.
இந்த மாற்றங்கள், கனடாவின் குடிவரவு முறையை மேலும் தெளிவாகவும், நியாயமான முறையிலும் மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டபூர்வமான அனுமதியுடன் உள்ளவர்கள் தங்கள் ஆவணங்களை புதுப்பித்து, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |