கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 3 பேர் காயம்
டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவில் துப்பாக்கி சூடு
சனிக்கிழமை இரவு டொராண்டோவின் பரபரப்பான வணிகப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டொராண்டோ வணிகப் பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த உடனே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து டொராண்டோ காவல்துறை X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதில், மக்கள் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
மேலும் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்தை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகம் வழங்கிய தகவலின் படி, சல்சா திருவிழா நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இந்த தாக்குதல் சம்பவமானது அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |