கனடாவில் கல்லூரி வகுப்பறையில் 3 பேருக்கு கத்திக்குத்து
கனடாவில் வகுப்பறையில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வு வகுப்பின் போது ஒரு பேராசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர், மேலும் ஒருவர் காவலில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் ஹாகி ஹாலில் நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதா என்பது தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
thestar
தாக்குதலுக்கான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அவர் வகுப்பிற்குள் நுழைந்து ஆசிரியரிடம் நீங்கள் பேராசிரியரா என்று கேட்டார். அப்போது கத்தியை எடுத்து அவரை குத்தியதாக நேரில் கண்டா சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கத்தியை எடுத்தவுடன் நாங்கள் வெளியே ஓடிவிட்டோம் என்றும் பேராசிரியருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
Nick Iwanyshyn/The Canadian Press/AP
இந்த சம்பவத்தின்போது வகுப்பில் சுமார் 40 மாணவர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து புதன்கிழமை மாலை திட்டமிடப்பட்ட வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன, ஆனால் மற்ற அனைத்து வளாக நடவடிக்கைகளும் வழக்கம் போல் தொடரும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Aastha Shetty/CBC)
Canada, Waterloo Stabbing, Ontario
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |