கனடாவிற்கு கணவரை பிரிந்து சென்ற இளம்பெண்! நடந்த கண்ணீர் சம்பவம்... வீடியோ பதிவால் மாட்டி கொண்ட குடும்பத்தார்
கனடாவுக்கு மனைவி சென்ற இரண்டு மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோஸ்டா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணிற்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 3 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஓராண்டுக்கு முன்னர் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இளைஞரின் முன்னாள் மனைவி கனடாவுக்கு சென்றார். இந்த சூழலில் இளைஞர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் வீடியோவை ஒன்றை பதிவு செய்த அவர் தனது மரணத்துக்கு காரணம் மனைவியின் பெற்றோர் மற்றும் அவர்களின் இரண்டு மகன்கள் தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிர்ச்சி புகாரை இளைஞரின் தந்தை பொலிசில் அளித்துள்ளார். அதில், இளைஞரின் மரணத்திற்கு அவரின் முன்னாள் மனைவியின் தந்தை சோகன் சிங், அவர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தான் காரணம். வேண்டுமென்றே சோகன் சிங் மற்றும் குடும்பத்தார் தங்கள் மகளுக்கு அழுத்தம் கொடுத்து என் மகனிடம் இருந்து விவாகரத்து பெற வைத்தனர், அவரை விருப்பமின்றி கனடாவுக்கும் அனுப்பி வைத்தனர்.
என் மகன் தனது குழந்தையை காண அவர் மாமியார் வீட்டிற்கு சென்ற போதெல்லாம் அவனை அவமானப்படுத்தியுள்ளனர். இதெல்லாம் தான் என் மகன் மரணத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதோடு கனடாவில் உள்ள சோகன் சிங் மகளையும் தொடர்பு கொண்டு விசாரிக்கவுள்ளனர் என தெரியவந்துள்ளது.