அந்த இளம்பெண் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளலாம்! கனடா பொலிசார் முக்கிய தகவல்
கனடாவில் மனநல சிகிச்சை மையத்தில் இருந்து காணாமல் போன பெண் குறித்து பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் Coquitlam நகர பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெல்லி (27) என்ற பெண் கடந்த 4ஆம் திகதி மனநல சிகிச்சை மையத்தில் கடைசியாக காணப்பட்ட நிலையில் பின்னர் காணாமல் போனார்.
கெல்லியின் தற்போதைய நிலை குறித்து கவலை ஏற்பட்டுள்ளது, அவரை கண்டுபிடித்து மனநல மையத்தில் ஒப்படைக்க வேண்டிய நிலை உள்ளது.
Coquitlam RCMP
அவர் வான்கூவர் பகுதிக்கு அடிக்கடி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெல்லி தனக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளலாம்.
எனவே கெல்லியைப் யாராவது பார்த்தால் அவரை அணுக வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக 911 ஐ அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.