கனடாவில் கனவு வாழ்க்கை! வெளிநாட்டு கும்பலிடம் சிக்கிய இளம்பெண்... எச்சரிக்கை செய்தி
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணிடம் பல லட்சம் மோசடி செய்த வெளிநாட்டு கும்பல் பொலிசில் சிக்கியுள்ளது.
கனடாவில் வேலையுடன் சொகுசு வாழ்க்கை
வெளிநாட்டு வேலை கனவில் புதுச்சேரியை சேர்ந்த 25 வயது இளம்பெண் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 2ம் திகதி அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் உயர் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, உங்களுக்கு கனடாவில் வேலை தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு வேறு இரு நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, போலியாக உருவாக்கப்பட்ட பணி ஆணையை தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடையே, வேலைக்கான டெபாசிட், விசாவிற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி சிறுசிறு தவணைகளாக ரூ.36 லட்சத்தை வெவ்வேறு வங்கி கணக்குகள் மூலம் பெற்றனர்.
வெளிநாட்டு கும்பல்
மேலும், கனடாவில் வேலை என கொடுக்கப்பட்ட ஆணையை சரிபார்த்தபோது, அது போலியானது என தெரிந்தது. இதைத்தொடர்ந்து இளம்பெண் சி.பி.சி.ஐ.டி பொலிசில் கொடுத்த புகாரையடுத்து நைஜீரியாவை சேர்ந்த ரூபன் குட்நியூஸ் நாயிமிகா(28) என்பவர் கடந்த டிசம்பர் 5ம் திகதி கைதானார்.
மேலும் பெங்களூரில் மறைந்திருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த நமேல் புரோசி (29) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஷ்(32) என்பவரும் சிக்கியுள்ளார்.