கனடாவில் திடீரென உயிரிழந்த இளம்பெண்! அவருக்கு நடந்தது என்ன?
கனடாவில் வாகன விபத்தில் இளம்பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Ottawaவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் all-terrain வாகனத்தில் இளம்பெண் சென்ற நிலையில் வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது.
ஒரு கட்டத்தில் வேகமாக மரத்தின் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
FILE PHOTO
இந்த சம்பவத்தில் மற்றொரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது, அவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலையை கண்டறிய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விசாரணைக்கு பின்னர் மேலும் இது தொடர்பில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.