இந்திய இளம்பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! சுவாரசிய தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய இளம் பெண்ணொருவர் பெரும் மதிப்புமிக்க கனேடிய ஸ்காலர்ஷிப்பை வென்று அசத்தியுள்ளார்.
அபுதாபியில் உள்ள GEMS United Indian Schoolன் முன்னாள் மாணவியான Candace Sara Ciju என்பவர் தான் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் வழங்கும் ஒரு மில்லியன் திர்ஹாம் (இலங்கை மதிப்பில் ரூ. 9,81,60,192.22) மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்பை வென்றுள்ளார்.
கனேடிய ஸ்காலர்ஷிப்பானது நான்கு வருட காலத்திற்கான கல்விக் கட்டணம், குடியிருப்பு செலவுகள், உணவு, புத்தகங்கள், காப்பீடு, தற்செயலான செலவுகள் மற்றும் பலவற்றை முழுமையாக உள்ளடக்கியதாகும்.
Gulf News
கோடிக்கணக்கான பணத்தை பெற்றுள்ள Candace கூறுகையில், கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் ஸ்காலர்ஷிப்புக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.