2024-ல் கனடாவில் வாழ மிகச்சிறந்த 10 நகரங்கள்: முன்னிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா
2024-ஆம் ஆண்டில் கனடாவில் குடியேறுபவர்கள் வசிப்பதற்கு மிகவும் பொருத்தமான நகரங்களை அடையாளம் காணும் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வீட்டு வசதி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூகம் மற்றும் சமூக சேவைகள் போன்ற முக்கிய அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக தெரிவான நகரங்கள்
இப்பட்டியலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. ஏனெனில் இந்த மாநிலத்திலுள்ள 6 இடங்கள் டாப்-10 பட்டியலில் உள்ளன.
அதிலும் குறிப்பாக விக்டோரியா, நார்த் வென்கூவர், மற்றும் பென்டிக்டன் என முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
அதன் பிறகு வினிபெக் (மனிடோபா) மற்றும் சாஸ்காட்டூன் (சாஸ்காட்செவான்) நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.
2024-ஆம் ஆண்டில் கனடாவில் வசிப்பதற்கு மிகவும் பொருத்தமான 10 நகரங்கள்:
1. விக்டோரியா, B.C.
2. நார்த் வென்கூவர், B.C.
3. பென்டிக்டன், B.C.
4. வினிபெக், மனிடோபா
5. சாஸ்காட்டூன், சாஸ்காட்செவான்
6. ரெஜினா, சாஸ்காட்செவான்
7. வெஸ்ட் வென்கூவர், B.C.
8. பிட்ட் மீடோஸ், B.C.
9. வைட்ஹார்ஸ், யுகான்
10. கம்லூப்ஸ், B.C.
டாப்-20 பட்டியலில் பார்த்தாலும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் வென்கூவர், டெல்டா போன்ற நகரங்களும் உள்ளன.
குடியேறும் மக்களுக்கு வழிகாட்டி
இந்த நகரங்கள் கனடாவில் குடியேறும் மக்களுக்கு பொருத்தமான வாழ்க்கை தரத்தை, சமுதாய ஆதரவை, மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
விலைமதிப்பு நிறைந்த வாழ்க்கை முறையுடன் புதிய வாழ்வை அமைக்க இந்நகரங்கள் சிறந்த வாய்ப்புகளை தருகின்றன. இதன் மூலம், கனடா, புதியவர்களுக்கு உலகின் சிறந்த நாடாகத் திகழ்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |