பெர்முடாவிலிருந்து பறந்த கனேடிய மருத்துவ விமானம் மாயம் - சிதைவுகள் கண்டுபிடிப்பு
Canadian air ambulance missing, debris found: பெர்முடாவிலிருந்து புறப்பட்டு மயமான கனேடிய மருத்துவ விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிதைவுகள் கண்டுபிடிப்பு
அமெரிக்க கடலோர காவல்படை, பெர்முடாவிலிருந்து பாஸ்டன் நோக்கி பறந்த கனடாவில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ விமானத்தின் சிதைவுகளை மாசசூசெட்ஸ் மாநிலத்தின் Nantucket தீவு அருகே கண்டுபிடித்துள்ளது.

13,000 அடி சரிந்தது
இந்த Gulfstream விமானம், பெர்முடாவின் LF Wade International Airport-இல் இருந்து இரவு 12:41 மணிக்கு புறப்பட்டு, 24,000 அடி உயரத்தில் பறந்தது.
மயமாவதற்கு முன், இரண்டு நிமிடங்களில் 13,000 அடி சரிந்து, தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விமானத்தில் ஆறு பேர் இருந்தனர். நான்கு கனேடியர்கள் மற்றும் இரண்டு பெர்முடா நாட்டவர்கள்.
கனடாவின் போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன், “நாங்கள் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடலோர காவல்படை, சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியை இரவு முழுவதும் தொடரும் என அறிவித்துள்ளது.
விமானம் Latitude Air Ambulance நிறுவனத்துக்குச் சொந்தமானது. இது கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள மருத்துவ அவசர சேவை நிறுவனமாகும்.
பெர்முடா அரசு, அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து குடும்பங்களுக்கு தகவல் வழங்கி வருகிறது. “அனைத்து ஆறு பேரும் பாதுகாப்பாகக் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்வதாக பெர்முடா பிரதமர் டேவிட் பர்ட் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |