காமன்வெல்த் போட்டியில் பிரித்தானியரின் சட்டையை பிடித்து முரட்டுத்தனமாக..கனேடிய வீரரின் வீடியோ
காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் கனேடிய வீரர் எதிரணி வீரரான பிரித்தானியரின் சட்டையை பிடித்து முரட்டுத்தனமாக சண்டைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரித்தானியாவில் 2022 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் நடந்த ஹாக்கிப் போட்டியில் கனடா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 11-2 என்ற கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. முன்னதாக, போட்டியின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 4-1 என முன்னிலை வகித்தது.
அப்போது கனேடிய வீரர் பால்ராஜ் பனேசர், இங்கிலாந்து வீரர் கிறிஸ் கிரிஃபித்ஸிடம் சண்டைக்கு சென்றார். கிரிஃபித்ஸினின் சட்டையைப் பிடித்து முரட்டுத்தனமாக பால்ராஜ் பனேசர் சண்டையிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
WATCH: Canada @FieldHockeyCan defender Balraj Panesar was shown the #RedCard during their final group stage #Hockey match against @EnglandHockey at #CWG22. pic.twitter.com/zl1RCdG5Io
— BNN Canada (@BNNCA) August 5, 2022
உடனே சக அணி வீரர்கள் இருவரையும் பிரித்தனர். அதனைத் தொடர்ந்து பால்ராஜுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. அதேபோல் கிறிஸ் கிரிஃபித்ஸிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
இந்த சண்டை ஏன் நடந்தது என்று தெரிய வராத நிலையில், உள்ளூர் வீரர் ஒருவர் தனது ஹாக்கி துடுப்பால் கனேடிய வீரரை சமாளித்த பிறகு இது நடந்ததாக thesun.co.uk-யில் உள்ள ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.