கனடாவில் சீக்கியர் தலைவர் ஹர்பீந்தர் சிங் கொலை வழக்கு: திடீர் திருப்பமாக 3 பேர் கைது
கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளரின் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹர்பீந்தர் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கு
கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்பீர் சிங் நிஜ்ஜருடன் தொடர்புடைய கொலை வழக்கில் மூன்று நபர்களை கனடா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹர்பீந்தர் சிங் நிஜ்ஜர் (45) என்ற சீக்கியர் பிரிவினைத் தலைவர், வான்கூவரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான கார் பார்க்கிங்கில் முகமூடி அணிந்த துப்பாக்கி சுடும் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசு இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டிய பிறகு, இந்த மோதல் அதிகரித்தது. டெல்லி இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.
3 பேர் கைது
வெள்ளிக்கிழமை கைது நடவடிக்கைகளை அறிவித்த காவல் துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர்ஜி,(Mandeep Mooker) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கரண் பிரார் (22), கமல்பிரீத் சிங் (22), மற்றும் கரன்பிரீத் சிங் (28) ஆவர் என்று தெரிவித்தார்.
இம்மூவரும் எட்மண்டன், அல்பெர்ட்டாவில் வசித்து வந்ததாகவும், அங்கேயே கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்ற பதிவுகள் அவர்கள் மூன்று பேர் மீதும் முதல் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக காட்டுகிறது. "இந்த விஷயங்கள் தொடர்பாக தனித்தனி மற்றும் தெளிவான விசாரணைகள் நடந்து வருகின்றன.
நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் தொடர்பு மட்டும் இதில் அடங்காது," என்றும் உதவி ஆணையர் டேவிட் டெபோல் கூறினார்.
கொலை வழக்கில் வேறு சிலரும் தொடர்புடையிருக்கலாம், மேலும் கைது நடவடிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நிஜ்ஜர், பஞ்சாப் பகுதியில் தனிநாடு சீக்கிய தேசமான காலிஸ்தான் உருவாக்கம் செய்ய வேண்டும் என பொது மக்களிடம் பிரச்சாரம் செய்த சீக்கிய பிரிவினைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |