ரூ.930 கோடி! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த கனேடிய இளைஞர்... அம்பலமான பலே மோசடி
கனேடிய இளைஞர் ஒருவர் ரூ 930 கோடி மதிப்புள்ள cryptocurrency-ஐ அமெரிக்காரிடம் இருந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளையடித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவிற்கு அருகிலுள்ள ஹாமில்டன் நகர காவல்துறையின் கூற்றுப்படி, ஒரு நபரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோ பணம் இது தான் என தெரியவந்துள்ளது.
அதன்படி மொத்தமாக கனேடிய டொலர் மதிப்பில் 46 மில்லியனை (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 930 கோடி) SIM swap தொழில்நுட்ப முறையில் அமெரிக்கரிடம் இருந்து கனேடிய இளைஞர் கொள்ளையடித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் எலக்ட்ரானிக் க்ரைம்ஸ் டாஸ்க் ஃபோர்ஸ் ஆகியவற்றின் கூட்டு விசாரணையின் விளைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருடப்பட்ட கிரிப்டோவில் சிலவானது அரிதான ஓன்லைன் கேமிங் யூசர் பெயர்களை வாங்க பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.