80க்கும் அதிகமான இளம்பெண்களை சீரழித்த கனேடியர்: இளம்பெண் ஒருவரை அணுகும்போது சிக்கிய காட்சி
பிரபல கனேடிய ஃபாஷன் ஜாம்பவான் ஒருவர் 80க்கும் அதிகமான இளம்பெண்களை சீரழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், இளம்பெண் ஒருவரை அவர் அணுகும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
ஃபாஷன் நிறுவனம் நடத்தும் போர்வையில், ஏராளம் இளம்பெண்களை சீரழித்ததாக Peter Nygard என்ற அந்த கனேடியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Nygardஇன் தனிப்பட்ட புகைப்பட கலைஞராக இருந்த Stephen Feralio என்பவர், தற்போது Nygardஇன் ஆபாசங்களை தோலுரித்துக் காட்டி வருகிறார்.
நான் அவரது அந்தரங்கத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் தொடர்ந்து பலரை சீரழிக்கப்போகிறார், ஆகவேதான் அவரது முகத்திரையைக் கிழித்தேன் என்கிறார் Feralio.
Nygard இளம்பெண்களை மயக்கும் காட்சிகள், 16,17 வயதுள்ள பெண்களை ஆபாச நடனம் ஆட விட்டு ரசிக்கும் காட்சிகள், கடையில் பொருள் வாங்குவதுபோல் கடற்கரைகளில் சூரியக்குளியல் போடும் பெண்களை தேடிப் பிடித்து, 15 வயது பெண்களிடம் வயதை அதிகமாக கூறும்படி வலியுறுத்தும் காட்சிகள் என பல காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது 16 வயது பெண் ஒருவரை அணுகி Nygard மயக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்றை Feralio வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தன்னுடன் பயணிக்கும் இளம்பெண் ஒருவருடன் ஒரு 16 வயது ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஒருவரை அணுகும் Nygard, பாரவாயில்லையே, 16 வயதிலேயே ஒலிம்பிக்குக்கு வந்துவிட்டாயே என்று கூறியபடி, உரிமையுடன் அந்த பெண் அணிந்திருக்கும் அடையாள அட்டையை எடுத்து பார்க்கிறார்.
பின்னர், தன்னுடன் வந்துள்ள இளம்பெண்ணிடம், அவளது மொபைல் நம்பரை வாங்கு, அவளை நான் கண்டுபிடித்திருக்கிறேன், அவளை நான் இழக்க விரும்பவில்லை என்கிறார் Nygard.
இப்படித்தான் அவர் பெண்களை அணுகி, மாடலிங் செய்ய வாய்ப்பு தருவதாகவும், நிதியுதவி செய்வதாகவும் ஆசை காட்டியும், பின்னர் மொடலிங் வாய்ப்பை பறித்துவிடுவேன் என மிரட்டியும் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார் என்று கூறியுள்ளார் Feralio.
வின்னிபெக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள Nygard, அமெரிக்காவிலும் ஏராளமான பெண்களை சீரழித்ததால் அவர் மீது, அமெரிக்க அதிகாரிகள் கடத்தல், பாலியல் நோக்கத்திற்காக பெண்களை கடத்துதல், ஏராளமான பெண்கள் மீது பாலியல் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்கள்.