வெளிநாடொன்றில் சுயநினைவின்றிக் கிடந்த கனேடிய இளம்பெண்... சூழந்து நின்ற காட்டு நாய்கள்
அவுஸ்திரேலியாவில் கனேடிய இளம்பெண் ஒருவர் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரை 12 காட்டு நாய்கள் சூழந்து நிற்பதை அங்குள்ள மக்கள் கண்டுள்ளார்கள்.
சுயநினைவின்றிக் கிடந்த கனேடிய இளம்பெண்
இன்று காலை 6.35 மணிக்கு, அவுஸ்திரேலியாவின் Fraser Island என்னும் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில், 19 வயதுடைய கனேடிய இளம்பெண்ணொருவர் சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் 12 காட்டு நாய்கள் நிற்பதை மக்கள் கண்டுள்ளார்கள்.
அந்தப் பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அவர் நாய்களால் தாக்கப்பட்டதால் உயிரிழந்தாரா அல்லது தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழந்தாரா என்பதை அறிவதற்காக விசாரணை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |