படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் கனேடிய இளம்பெண்.!
கனடாவில் இளமைப்பெண் ஒருவர் தான் தூங்கும் படுக்கையில் பாதியை வாடகைக்கு விடுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..!
வீடுகள், சைக்கிள்கள், கார்கள் போன்றவற்றை வாடகைக்கு விடுவது தெரிந்ததே., ஆனால் ஒரு இளம் பெண் தன் படுக்கையில் பாதியை வாடகைக்கு விடுகிறாள். இது மிகவும் விசித்திரமாகத் தோன்றினாலும் உண்மைதான்..
Queen-size படுக்கையில் இருக்கும் ஒரு இளம்பெண் அந்தப் படுக்கையின் பாதியில் உறங்குகிறாள். மீதி பாதி வாடகைக்கு. இந்த விசித்திரமான சம்பாத்தியம் எவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இந்த பெண்ணின் பெயர் அன்யா எட்டிங்கர். அவர் தனது கிங் சைஸ் படுக்கையை நன்றாகப் பயன்படுத்துகிறார். எந்தக் கடின உழைப்பும் இல்லாமல் பெரும் பணம் சம்பாதிக்கிறார். தன் படுக்கையில் பாதியை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அப்பெண் கூறுகிறார்.
இருப்பினும், இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அவரது பாதி படுக்கையை வாடகைக்கு எடுப்பவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். இப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று யாருக்காவது யோசனை வருமா.!
அன்யா கனடாவின் ரொறன்ரோவில் வசிப்பவர். அன்யா சமூக ஊடக தளமான Facebook Marketplace-ல் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தான் ஒரு 'படுக்கைத் துணையை' தேடுவதாக கூறியுள்ளார்.
ரொறன்ரோ மிகவும் விலையுயர்ந்த நகரம் என்று அன்யா கூறுகிறார். இங்கு அறை வாடகை மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் சாதாரண மக்கள் இந்த வாடகையை கொடுக்க சிரமப்படுகிறார்கள். அதனாலதான் அவர் ஒரு பெட் மேட்டை தேடுவதாக கூறியுள்ளார்.
நிபந்தனைகள், வாடகை
தனது படுக்கையை வாடகைக்கு எடுப்பதற்கான முதல் நிபந்தனை, தனது 'பெட் மேட்' ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தன்னுடன் வாழ வேண்டும் என்பதும் அந்த பெண் வெளிப்படுத்தினார்.
இந்தப் படுக்கைக்கான வாடகை மாதம் 900 கனேடிய டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.2.14 லட்சம்) ஆகும்.
ஒரு பெண் தனது பாதி படுக்கையை வாடகைக்கு விடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த டீல் நல்லதல்ல என்று சிலர் கூறுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Queen-sized bed rent, Rent Half a bed, canada Toranto, Toronto-based realtor Anya Ettinger