பாரீஸ் ஒலிம்பிக்கில் உளவு வேலை... சிக்கலில் கனடாவின் மகளிர் கால்பந்து அணி
ட்ரோன் மூலமாக உளவு பார்த்த விவகாரத்தில் கனடாவின் மகளிர் கால்பந்து அணிக்கு 6 புள்ளிகளை குறைத்துள்ளதுடன் பயிற்சியாளருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகாம் மீது ட்ரோன் பறக்கவிட்டு
சர்வதேச கால்பந்து சங்கமான Fifa குறித்த தடையை அறிவித்துள்ளதுடன், கனேடிய கால்பந்து சங்கத்திற்கு 226,000 டொலர் அபராதமும் விதித்துள்ளது. திங்களன்று நியூசிலாந்து மகளிர் அணியினரின் பயிற்சி முகாம் மீது ட்ரோன் பறக்கவிட்டு அவர்களின் திட்டங்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் Bev Priestman ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, கனேடிய கால்பந்து சங்கத்தின் அதிகாரிகளான Joseph Lombardi மற்றும் Jasmine Mander ஆகியோரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்துள்ளனர்.
கொள்கைகளை மீறும் செயல்
இந்த விவகாரம் தொடர்பில் Fifa தெரிவிக்கையில், கனடாவின் மகளிர் கால்பந்து அணி ட்ரோன் பயன்படுத்தியுள்ளது Fifa அமைப்பின் கொள்கைகளை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் கனேடிய அணி நியூசிலாந்துடனான தங்களின் துவக்க ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் 6 புள்ளிகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் பிரான்ஸ் மற்றும் கொலம்பியா அணிகளுடனான போட்டிகள் முக்கியத்துவம் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |