இடுப்பில் மட்டுமே ஆடையணிந்த பெண்ணை அடிக்கும் வெள்ளையர்: சிலையின் பின்னாலிருக்கும் வலியை உணர்த்தும் செய்தி
நம்மில் சிலர், நம் நாடுகள் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்த வரலாற்றை கேட்டிருக்கிறோம். இன்று பிரித்தானியா என மரியாதையுடன் பார்க்கப்படும் நாடு, முன்பு பல நாடுகளை அடிமைகளாக வைத்திருந்திருக்கிறது.
பிரித்தானியாவின் சார்பில் அது அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளை ஆண்ட ஆளுநர்கள், அந்த நாடுகளில் பெரும் அராஜகங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக பெண்கள் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றும் பல நாடுகளின் வரலாறுகளை நீங்கள் படித்தால், ஆட்சி செய்பவர்கள் முன்னால், பெண்கள் மார்புகளை மறைக்கும் வகையில் உடை அணியக்கூடாது என்னும் ஒரு அசிங்கமான விதி இருந்திருக்கிறது.
அதைப் பயன்படுத்திக்கொண்டு சீரழிக்கப்பட்ட பெண்களின் கதைகளை நாம் சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். போரிட்டு தோற்றுப்போனால் பெண்களுக்கு கிடைக்கும் தண்டனை வன்புணர்வு.
தொட்டால் தீட்டு என்று கூறும் வெள்ளையினத்தவருக்கு, அந்த பெண்களை சீரழிக்கும்போது மட்டும் தீட்டு எல்லாம் மறந்துபோய்விடும். இப்படி பல நாடுகளில் பல வகையில் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் ஒரு நிறை மாதக் கர்ப்பிணிப்பெண்ணை அவளது எஜமான் காளைக்கு பதிலாக ஏரில் பூட்டி நிலத்தை உழுததாகவும், அந்த பெண், அந்த வயலிலேயே பிள்ளை பெற்று இறந்துபோனதாகவும் ஒரு சம்பவத்தை முதியவர்கள் அச்சத்துடன் விவரிப்பதுண்டு.
இந்தியர்களையும் ,கருப்பினத்தவர்களையும், பூர்வக்குடியினரையும் அடிமைகளாக நடத்திய வெள்ளையினத்தவர்களில் சிலர், இன்னமும் அதை பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் கனடாவில் கருப்பினப்பெண் ஒருவரை அவமதித்த வெள்ளையர் ஒருவர் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்ட சம்பவம் நினைப்பூட்டியது.
கருப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்த காலம் மீண்டும் திரும்பினால் நன்றாக இருக்கும் என்பது போல் ஒரு கருப்பின அலுவலரைப் பார்த்து கேவலமாக பேசினார் அந்த கனேடியர். இந்நிலையில், மார்பை மறைக்காமல் இடுப்பில் மட்டுமே உடையணிந்த ஒரு கருப்பினப் பெண்ணை அவரது எஜமான் அடிப்பது போன்ற ஒரு சிலை தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
1800களில், ஜூட் என்ற அந்த கருப்பினப் பெண், ஒரு நாள் இரவு சத்தமில்லாமல் தான் வேலை செய்த வீட்டின் சமையலறைக்குள் நுழைந்து ஒரு துண்டு ரொட்டியையும் ஒரு துண்டு சீஸையும் திருடிச் சாப்பிடும்போது கையும் களவுமாக அவரது எஜமானின் மகனிடம் சிக்கியிருக்கிறார். ரொட்டித்துண்டை திருடியதற்காக ஜூடை அந்த நபர் கடுமையாக அடித்திருக்கிறார்.
மறு நாள், டிசம்பர் மாதம் 28ஆம் நாள், 1800ஆம் ஆண்டு, அந்த பெண் அடி தாங்காமல் இறந்துபோயிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ந்து போன Sharon Robart-Johnson என்ற வரலாற்றாளர், ஜூடுடைய மரணத்துக் காரணமானவர்கள் தண்டனையிலிருந்து தப்பியும் விட்டார்கள் என்று அறிந்தபோது, தான் கடுங்கோபம் அடைந்ததாக தெரிவிக்கிறார். கனடாவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை ஆகத்து மாதம் 1ஆம் திகதி Emancipation Dayஆக கொண்டாடுகிறார்கள்.
ஆனால், அந்த காலகட்டத்தில் யாருமே ஜூடுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ செவிசாய்க்கவில்லை என்று கூறும் Sharon Robart-Johnson, அவர்களைக் குறித்து புத்தகங்கள் எழுதி வருகிறார்.
200 ஆண்டுகளாக அவர்களுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்று கூறும் Sharon Robart-Johnson, அதனால் இப்போதாவது அவர்களைக் குறித்த விடயங்கள் வெளியே வரட்டும் என்பதற்காக தான் இந்த புத்தகங்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கிறார்.