ட்ரம்பின் அமெரிக்காவிற்கு ஏன் பயணப்படுவதில்லை... கனேடிய மக்கள் சொன்ன காரணம்
அமெரிக்க எல்லையில் கனேடியர்கள் தடுத்து வைக்கப்படுவதுடன், விலங்கிடப்பட்டு சிறையில் தள்ளும் அபாயம் இருப்பதால் ட்ரம்பின் புதிய அமெரிக்காவிற்கு பயணப்படுவதை தவிர்த்து வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனடா தத்தளிக்கும் நிலையில்
இருப்பினும், வெறும் 15 சதவீத மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் அமெரிக்காவிற்கு பயணப்படுவதும் வெளிவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது மிக மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது.
எஃகு, அலுமினியம், கார்கள் மற்றும் வாகன பாகங்கள் மீதான ட்ரம்பின் வரிகளால் கனடா தத்தளிக்கும் நிலையில், அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை அழைப்பு விடுத்து வருவதும் கனேடிய மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
மேலும் கனேடிய நடிகை, 35 வயதான Jasmine Mooney என்பவர் அமெரிக்க மெக்சிகோ எல்லையில் விசா விவகாரம் தொடர்பில் தடுத்து நிறுத்தப்பட்டு, 12 நாட்களுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டார்.
மட்டுமின்றி, ட்ரம்பிற்கு பதிலடி தரும் வகையில், உள்ளூர் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என கனேடிய மக்களிடையே எழுந்த ஆர்வமும் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2024ல் மட்டும் 20 மில்லியன் கனேடிய மக்கள் அமெரிக்காவிற்கு பயணப்பட்டுள்ளனர். ஆனால் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததன் பின்னர் இந்த எண்ணிக்கை கடும் சரிவினை சந்தித்துள்ளது.
இரு நாடுகளும் உலகின் மிக நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன, முழுமையாக ஒருங்கிணைந்த ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளன. மேலும் மற்றவரை தங்கள் பிடித்த வெளிநாட்டினராக வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கடுமையான விசா நடைமுறை
ஆனால், ட்ரம்பிற்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதால், பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
துரோகத்தின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீண்டுவிட்டோம். ஆனால் பாடங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று கார்னி வெளிப்படையாக கூறியுள்ளது கனேடிய மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், கடுமையான விசா நடைமுறைகளுக்கு பயந்து, கனேடியர்களும் அமெரிக்காவின் பிற நட்பு நாடுகளும் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கான சுற்றுலா மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. மற்றொரு பாரம்பரிய நட்புப் பிராந்தியமான மேற்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பார்வையாளர்களும் பின்வாங்கியுள்ளர்.
இந்த ஆண்டு பயணிகள் வருகைகள் குறைவதாலும், அமெரிக்கப் பொருட்களின் கொள்முதல் ரத்து செய்யப்பட்டதாலும் அமெரிக்கா 90 பில்லியன் டொலர் வரை வருவாயை இழக்க நேரிடும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |