புற்றுநோய் எதனால் வருகிறது.., அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?- மருத்துவரின் விளக்கம்
Cancer
By Yashini
புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், புற்றுநோய் எதனால் வருகிறது, அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம்
- தனது பரம்பரையில் முன்னோர்களுக்கு ஜீன்களிலே புற்றுநோய் தொற்று இருந்திருந்தால் அது அடுத்த தலைமுறைகளுக்கு வர அதிகளவு வாய்ப்புள்ளது.
- புகையிலை, மதுப்பழக்கம், வெற்றிலையுடன் புகையிலை, பான்பராக் போன்றவை பயன்படுத்துவதனால் பலவகையான புற்றுநோய் ஏற்படுகிறது.
- வீட்டில் மேற்கூரையில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ஆர்சனிக் என்கின்ற உலோகம் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
- எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சுகள் மற்றும் அதிக நேர சூரிய கதிர்வீச்சுகளாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
- வாகனப்புகைகளில் வரும் வேதிப்பொருட்களை சுவாசிப்பதாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
- மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தப்படும் எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
- வைரஸ் தொற்றினால் புற்றுநோய் ஏற்படுகிறது.
- பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து அல்லது பிரீஸரில் வைத்து உண்ணப்படும் உணவினால் புற்றுநோய் ஏற்படுகிறது.
- ரசாயனங்கள் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதனாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
- பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சிகளை உணவில் எடுத்துக்கொள்வதனாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்
- காரணமில்லாத உடல் எடையிழப்பு
- மோசமான இருமல்
- கழிவறை பழக்கங்களில் மாற்றம்
- சிறுநீரில் அல்லது வாயில் ரத்தம்
- உடம்பில் வீக்கம் மற்றும் கட்டிகள்
- காயம் ஆறுவதில் தாமதம்
- தீவிரமான அழற்சி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US