கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 100 டொலர் இலவசம்! வெளியான முக்கிய தகவல்
கனேடிய மாகானத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு 100 டொலர் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. கடந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. பல நாடுகளில் கொரோனா புது புது வைரஸாக உருமாறி மக்களை கொடூரமாக தாக்கி வருகின்றது.
கொரோனா அச்சத்தால் அனைத்து நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கனேடிய மாகானமான ஆல்பர்ட்டா ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு ஊக்கதொகையாக 100 டொலர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து அல்பர்ட்டா Premier Jason Kenney கூறியதாவது, 18 வயதினர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த திட்டம் செல்லும். மேலும் அக்டோபர் 14 வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் செப்டம்பர் 13ஆம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆல்பர்ட்டா மக்கள் அனைவருக்கும் 100 டொலர் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.