உங்களால் மட்டும் தான் தோனி! நன்றி சொன்ன கேண்டி க்ரஷ் கேம் நிறுவனம்
கிரிக்கெட் வீரர் தோனியால் கேண்டி க்ரஷ் கேம் மீண்டும் இந்தியாவில் பிரபலமாகியுள்ளது.
3 மணி நேரத்திற்குள் 36 லட்சம் பயனர்கள்
கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் இண்டிகோ விமானத்தின் வீடியோ வைரலானதால் கேண்டி க்ரஷ் சாகா மொபைல் கேம் மீண்டும் பெயர் பெற்றது.
மகேந்திர சிங் தோனி விமானத்தில் கேண்டி க்ரஷ் என்ற வீடியோ கேம் விளையாடும் வீடியோ வைரலாகி, அந்த கேம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதில், இந்த கேம் 3 மணி நேரத்திற்குள் 3.6 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றது.
வைரலான வீடியோ
அந்த வீடியோவில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் தோனிக்கு சாக்லேட் கொடுக்கும்போது, தோனியின் இருக்கைக்கு முன்னால் கேண்டி க்ரஷ் கேம் திறந்திருக்கும் டேப்பைக் காணலாம். இதனால் தான் கேண்டி க்ரஷ் கேம் ட்ரெண்டிங்காகியுள்ளது.
வெறும் மூன்று மணி நேரத்தில் 30 லட்சம் பேர் தங்கள் இந்த கேமை பதிவிறக்கம் செய்ததாக மொபைல் கேமிங் அப்ளிகேஷன் கூறியுள்ளது.
ட்விட்டரில் தோனிக்கு நன்றி
கேண்டி க்ரஷின் ட்விட்டர் பக்கமும் தோனிக்கு நன்றி தெரிவித்தது. “இப்போது - வெறும் 3 மணி நேரத்தில் 3.6 மில்லியன் புதிய பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளோம்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் @msdhoniக்கு நன்றி. உங்களால்தான் நாங்கள் இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறோம்” என்று கேம் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Just In - We Got 3.6 Million New Downloads in just 3 hours.
— Candy Crush Saga (@teams_dream) June 25, 2023
Thanks to the Indian Cricket Legend @msdhoni . We are Trending In India Just Because Of You.
#Candycrush #MSDhoni𓃵
~ Team Candy Crush Saga pic.twitter.com/LkpY8smxzA
தோனி கிரிக்கெட் மற்றும் வீடியோ கேம்களின் தீவிர ரசிகர். Call of Duty, FIFA மற்றும் PUBG ஆகியவை அவருக்குப் பிடித்த கேம்கள் ஆகும்.
MS Dhoni, mobile phone game, Candy Crush Saga, Dhoni Viral Video, Twitter, Dhoni indigo video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |