இளவரசர் ஹரி வீட்டின் அருகிலிருந்து வீசும் கஞ்சா நாற்றம்: மக்கள் புகார்
அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் வீட்டின் அருகிலிருந்து வீசும் கஞ்சா நாற்றம் தங்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாக அப்பகுதியில் வாழும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் கலிபோர்னியாவிலுள்ள ஒரு மாளிகையில் குடிபுகுந்தார்கள். ஆனால், கனவு இல்லமாக அமைந்த அந்த மாளிகைக்கு அருகில் ஒரு கஞ்சா பண்ணை இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்!
ஆம், இளவரசர் ஹரி, தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழும் அந்த வீட்டிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் ஒரு கஞ்சா பண்ணை உள்ளதாம். அந்த பண்ணையில், ஒரு கஞ்சா தொழிற்சாலையும் உள்ளதாம். அங்கிருந்து வீசும் நாற்றத்தை சகிக்க இயலாமல் மக்கள் பலர் அந்த நிறுவனம் குறித்து புகாரளித்துள்ளனராம்.
புகாரைத் தொடர்ந்து, அந்த நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான அமைப்புகளை நிறுவ இருப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், அது ஹரி மேகனுக்கும், தங்களுக்கும் நல்ல செய்தி என்கிறார்கள்.