அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: தீவிர வலதுசாரி போராளிக்கு அதிகபட்ச தண்டனை விதிப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி தீவிர வலதுசாரி போராளிகளின் தலைவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
18 ஆண்டுகள் சிறை தண்டனை
Oath Keepers என்ற தீவிர வலதுசாரி குழுவின் தலைவரான Stewart Rhodes என்பவர் மீது தேசத்துரோக சதி மற்றும் பிற குற்றங்களின் மீதான குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
@getty
அரசு தரப்பு சட்டத்தரணிகள் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கோரியுள்ள நிலையில், தற்போது அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், Oath Keepers குழுவின் புளோரிடா அமைப்பின் தலைவரான கெல்லி மெக்ஸ் என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே நின்றிருந்த Stewart Rhodes, தமது ஆதரவாளர்களை உள்ளே அனுப்பி கலவரத்தில் ஈடுபட தூண்டியுள்ளார்.
மிக நீண்ட கால தண்டனை
இந்த நிலையில், ரோட்ஸ் மற்றும் மெக்ஸ் ஆகிய இருவரும் உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், ஆவணங்கள் அல்லது நடைமுறைகளை சேதப்படுத்தியதற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
@getty
ரோட்ஸின் தண்டனையானது ஜனவரி 6ம் திகதி முன்னெடுக்கப்பட்ட கலவரத்திற்காக இதுவரை வழங்கப்பட்ட மிக நீண்ட கால தண்டனையாகும். 2020 ஜனாதிபதி தேர்தல் முடிவை எதிர்த்து டொனால்ட் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
முன்னாள் ராணுவ வீரரும் சட்டத்தரணியுமான ரோட்ஸ் 2009ல் Oath Keepers என்ற தீவிர வலதுசாரி குழுவை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.