விமானத்தை தரையிறக்கியது ஒரு பிளம்பரா? கேப்டன் ஸ்மித் கேள்வி
Flydubai Captain Smit Machchhar says he was unaware of Israeli plumber Yaniv Hayoun's landing of the plane: Flydubai விமானியான கேப்டன் ஸ்மித், விமானத்தைத் தரையிறக்கியது ஒரு பிளம்பர் என்னும் விடயம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
Flydubai விமானத்தை அதன் விமானிகளில் ஒருவர் தரையில் மோத முயன்ற விடயத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.
இந்நிலையில், அந்த விமானத்தின்ப் விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், ஒரு பிளம்பர் விமானத்தைத் தரையிறக்கியதாக கூறப்படும் விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கேப்டன் ஸ்மித் கேள்வி
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கேப்டன் ஸ்மித், தன் மீதான தாக்குதல் குறித்து விளக்கியுள்ளார்.

தன் தலையில் முதல் அடி விழுந்ததும், விமானத்திலிருந்து ஏதோ கழன்று தன் தலையில் விழுந்துவிட்டதாகத்தான் தான் எண்ணியதாக கூறியுள்ளார் கேப்டன் ஸ்மித்.
பிறகுதான் தன் சக விமானி தன்னைத் தாக்குவதைப் புரிந்துகொண்டதாகவும், தான் சுயநினைவிழந்ததாகவும் தெரிவிக்கிறார்.
தன்னை பயணிகள் வெளியே இழுத்து வந்ததை நினைவுகூரும் அவர், தாக்குதல்தாரியை அவர்கள் பிடித்துவைத்திருந்ததைக் கண்டதாகவும், பணியில் இல்லாத விமானிகள் இருவர் விமானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
இஸ்ரேல் நாட்டு பிளம்பரான Yaniv Hayoun என்பவர் விமானத்தைத் தரையிறக்கியதாக கூறப்படும் விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள கேப்டன் ஸ்மித், எனக்கு அந்த விடயம் உண்மையாகவே தெரியாது என்கிறார்.

எனது முழு கவனமும் பயணிகளை கைவிட்டுவிடக்கூடாது என்பதின் மேலேயே இருந்தது என்று கூறும் அவர், ஒரு பிளம்பர் விமானத்தைத் தரையிறக்கமுடியுமா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
Yaniv Hayoun, தான் தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்தியதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலிருந்து, விமானத்தை எப்படி தரையிறக்குவது என தான் கற்றுக்கொண்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.