பிரித்தானியாவில் கார் விபத்து: இரண்டு இளம் வயதினருக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் நடந்த கோர விபத்தில் 2 இளம் வயதினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
கென்ட்(Kent) பகுதியில் ஜனவரி 3ம் திகதி இரவு நீல நிற போர்டு ஃபீஸ்டா(Ford Fiesta) கார் ஒன்று இவாடே கிராமத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி சென்று விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கரமான சாலை விபத்து சம்பவத்தில் 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் ஓல்ட் ஃபெர்ரி சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கென்ட் பொலிஸார் அவசர மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.
இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்ட நிலையில், மற்றொரு 16 வயது சிறுமி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே சமயம் இந்த கார் விபத்துக்கான காரணத்தை அறிய, புலனாய்வு அதிகாரிகள் விபத்து ஏற்பட்ட இடத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |