நான் நிரபராதி..!நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ
நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தன்னை நிரபராதி என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதுரோ
அமெரிக்க படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அப்போது நீதிமன்றத்தில் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொண்டு உறுதிப்படுத்திய மதுரோ, “தான் நிரபராதி” என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

நிக்கோலஸ் மதுரோ நீதிமன்றத்தில் வாதம்
நீதிமன்ற விசாரணையின் போது பேசிய நிக்கோலஸ் மதுரோ, தான் தற்போது வெனிசுலாவின் நாட்டின் சட்டப்பூர்வமான ஜனாதிபதி என்பதை உறுதியாக வெளிப்படுத்தினார்.
அத்துடன் காரகாஸில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து தான் வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “தான் நிரபராதி” என்றும் மிகவும் “கண்ணியமான மனிதன்” என்றும் கூறிவிட்டு தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார்.

பலத்த பாதுகாப்பு
சிறைப்பிடிக்கப்பட்ட வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நியூயார்க் நகர கூட்டாட்சி நீதிமன்றத்தின் விதிமுறைகள் படி, வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போது கேமராக்கள் மற்றும் ஒலிப்பதிவு கருவிகள் அனுமதிக்கப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |