ஜேர்மனியில் பள்ளிக்கு வெளியே கார் விபத்து: 3 சிறுவர்கள் காயம்
ஜேர்மனியில் பள்ளிக்கு வெளியே கார் மோதிய சம்பவத்தில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
கார் விபத்து
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள பிளாங்கனீஸ் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு அருகே கார் விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த விபத்தில் 3 சிறுவர்கள் வரை காயமடைந்த நிலையில், பொலிஸார் இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் 7 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் ஒருவருக்கு இந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்திற்கான காரணம்
பள்ளி மாணவர் ஒருவரை அழைத்து செல்வதற்காக 75 வயது முதியவர் ஒருவர் காரில் வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரை நிறுத்த முயன்ற போது தவறுதலாக ஓட்டுநர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதே இந்த விபத்துக்கான காரணமாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |