நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து, கார்! 10 பேர் பலி..உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோர விபத்து
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. இன்னோவா கார் ஒன்று தனியார் பேருந்துடன் மோதியது.
இதில் கார் முற்றிலும் நொறுங்கியுள்ளது. அதில் பயணித்த 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Twitter
உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு
அவர்களில் குழந்தையும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் காரில் இருந்த 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே அவர்கள் மேல் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளனர். இந்த நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Representational image (File picture)