நீதிமன்ற வளாகத்தில் கார் குண்டு வெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே கார் குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம நடைபெற்றுள்ளது.

இன்று மதியம் 12;39 மணியளவில், நுழைவாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடிப்பின் சத்தம் 6 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அருகே இருந்த கார்களும் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (PIMS) அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மீது குற்றச்சாட்டு
இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஜனாதிபதி சர்தாரி தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வானாவில் உள்ள ஒரு ராணுவ கல்லூரிக்குள் ஆயுதமேந்திய போராளிகள் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் முறியடித்ததாக சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |