லாஸ் ஏஞ்சல்ஸில் மளிகைக் கடைக்குள் புகுந்த கார்: கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த விபரீதம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மளிகை கடைக்குள் கார் புகுந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மளிகை கடைக்குள் புகுந்த கார்
வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மளிகைக் கடைக்குள் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் குறைந்தது இரண்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. அதே சமயம் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
⚡️"At least 2 people were killed and five others injured after a car crashed into a grocery store in Westwood [Los Thursday afternoon...The cause of the crash has not been been determined." pic.twitter.com/KJnbWF0Lrn
— The World Times (@worldtimes4u) February 5, 2026
விபத்துக்கான காரணம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து, லாஸ் ஏஞ்சல்ஸின் பரபரப்பான வெஸ்ட்வுட் பவுலேவார்டில்(Westwood Boulevard) பகுதியில் நடைபெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.
விபத்து நடைபெற்ற இடத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர், தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |